Home /News /tamil-nadu /

Headlines | இஸ்ரோ ராக்கெட் முதல் உ.பி தேர்தல் வரை.. இன்றைய முக்கியச் செய்திகள் ( பிப்ரவரி 15)

Headlines | இஸ்ரோ ராக்கெட் முதல் உ.பி தேர்தல் வரை.. இன்றைய முக்கியச் செய்திகள் ( பிப்ரவரி 15)

முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள்

Headlines Today (February 15) : தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

  புவி கண்காணிப்புக்கான EOS-04 உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்களை, PSLV C-52 ராக்கெட் மூலம் இந்தியா வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தயாரித்த EOS-04 என்ற செயற்கைக்கோளை ஏவுவதற்கான இருபத்தி ஐந்தரை மணி நேர கவுன்ட் டவுன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.29 மணிக்கு தொடங்கியிருந்தது. அதுமுடிந்த நிலையில் திங்கள் அதிகாலை 5.59 மணிக்கு பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் மூலம் EOS-4 செயற்றைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

  பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  கனடா நாட்டில் நடைபெற்று வரும் எல்லைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளார். இதன்மூலம் 1970ம் ஆண்டுக்கு பிறகு கனடாவில் அவசர நிலை சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  Also Read: வானத்துல வெளிச்சமா ஏதோ போகுது சார்.. மெயில் போட்ட கிருஷ்ணகிரி நபருக்கு இஸ்ரோ அனுப்பிய பதில்

  டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியாவின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இல்கர் ஐசி நியமிக்கப்பட்டுள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியதை அடுத்து, நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் சொத்துகளை டாடா குழுமத்திடம் கடந்த மாதம் மத்திய அரசு ஒப்படைத்தது.

  காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமற்றது என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.

  ஹிஜாப் விவகாரம் காரணமாக 5 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு கர்நாடகத்தில் உயர்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஹிஜாப் தொடர்பான வழக்கு விசாரணை, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடைபெற உள்ளது.

  உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கான்பூர் டெஹாட் பகுதியில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியில் இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்புடன் இருப்பதாக கூறினார்.

  Also Read:  இலங்கை வீரரை சென்னை அணியில் சேர்த்ததுக்கு எதிர்ப்பு.. சிஎஸ்கேவை புறக்கணிக்கும் போராட்டம் (Boycott Chennai Super Kings) தொடங்கியது

  உத்தரபிரதேசத்தின் 9 மாவட்டங்களில் உள்ள 55 சட்டமன்ற .தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட தேர்தலில் 61 சதவிகித வாக்குகள் பதிவானதாக கூறப்படுகிறது.

  தேனி கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்படுகிறது. பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததால், தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Headlines, ISRO, Tamil News

  அடுத்த செய்தி