Home /News /tamil-nadu /

Today Headlines: பூமியை கண்காணிக்க செயற்கைக்கோள் முதல் தீவிரமடையும் தேர்தல் பிரச்சாரம் வரை.. இன்றைய முக்கியச் செய்திகள் ( பிப்ரவரி 14)

Today Headlines: பூமியை கண்காணிக்க செயற்கைக்கோள் முதல் தீவிரமடையும் தேர்தல் பிரச்சாரம் வரை.. இன்றைய முக்கியச் செய்திகள் ( பிப்ரவரி 14)

தலைப்புச் செய்திகள்

தலைப்புச் செய்திகள்

Today Headlines February 14: பூமியை கண்காணிக்க செயற்கைக்கோள் முதல் தீவிரமடையும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் வரை..

  தமிழகத்தில் ஒரேகட்டமாக வருகிற 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. பிரசாரம் முடிய இன்னும் 4 நாள்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

  புவி கண்காணிப்புக்கான EOS-04 உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்களை, PSLV C-52 ராக்கெட் மூலம் இந்தியா வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது .இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ EOS-04 என்ற செயற்கைக்கோளை தயாரித்தது. இதற்கான இருபத்தி ஐந்தரை மணி நேர கவுண்டன் பிப்ரவரி 13ம் தேதி அதிகாலை 4.29 மணிக்கு தொடங்கிய நிலையில், இன்று காலை பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் மூலம் EOS-4 செயற்றைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

  இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டின் மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் செயலை தவிர்க்க, மத்திய மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் நிலையான தீர்வு காணப்படுவது அவசியம் என, முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

  தஞ்சையில் திமுக பிரமுகரிடம் இருந்து மாநகராட்சி மீட்ட 100 மதிப்பிலான இடத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆணையர் முன்னிலையில் காவல்துறை பாதுகாப்புடன் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

  திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள், கூலி உயர்வு கோரி கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 35 நாட்களை கடந்து வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

  திமுகவினர் தொடர்ந்து தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டால், மேற்கு வங்கத்தை போன்று தமிழகத்திலும் சட்டமன்றம் ஆளுநரால் முடக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.

  புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தப்பட்ட 314 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் மதுபானம் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் ரயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 314 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  அசாம் மாநிலத்தில் காட்டு யானைகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்கும் வகையில், யானைகளுக்காக பிரத்யேக விளைநிலத்தை விவசாயிகள் உருவாக்கியுள்ளன

  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காணாமல் போன 7 வயது சிறுமியை சிசிடிவி காட்சியை கொண்டு மூன்று மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

  ஈரோடு மாவட்டம் தெங்குமரஹடாவில் உள்ள மக்களை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக அக்கிராம மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள தெங்குமரஹடா பகுதியில் 30 சதவீதம் புலிகள் நடமாட்டம் இருப்பதாகவும், வனவிலங்குகள் இனப்பெருக்கம் நடப்பதாவும் கூறப்படுகிறது.
  Published by:Ramprasath H
  First published:

  Tags: ADMK, DMK, Edappadi palanisamy, Headlines, ISRO, MK Stalin, Tamilnadu

  அடுத்த செய்தி