Home /News /tamil-nadu /

Headlines Today : முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை - தலைப்புச் செய்திகள் (மே 13-2022)

Headlines Today : முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை - தலைப்புச் செய்திகள் (மே 13-2022)

மழை

மழை

Headlines Today : தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இந்திய வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

  தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி கேரளாவில் தொடங்குவது வழக்கம், ஆனால், இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இந்திய வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

  தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஜூன் 10-ம் தேதி நடைபெறவுள்ளது.

  காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் வகையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், 3 நாள் ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் இன்று தொடங்குகிறது.

  ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை முதல் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

  மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில், இலங்கையின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் ரணில் விக்ரமசிங்கே.

  உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி, பிரதமர் மோடி மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

  இலங்கைக்கு அனுப்ப 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை தமிழக அரசு கொள்முதல் செய்ய தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

  தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுவிக்குமாறு உரிமைகோர சட்டத்தில் இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

  அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது துவங்குவது என்பது குறித்து தேர்வுகள் முடிந்த பிறகே முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

  பட்டின பிரவேசம் போன்ற நிகழ்வுகளுக்கு வருங்காலங்களில் சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

  திருவாரூர் தெற்கு வீதியின் பெயரை டாக்டர் கலைஞர் சாலை என மாற்றினால் மாவட்டந்தோறும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  தேனி மாவட்டம் பாலார்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பொதுமக்கள் சீர்வரிசையாக வழங்கினர்.

  கனமழை எச்சரிக்கையால் ஆம்பூர் பிரியாணி திருவிழா, ஒத்திவைக்கப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

  போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்க அரசு தயாராக இருப்பதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

  சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் இரு விமானிகளும் உயிரிழந்தனர்.

  இந்திய பங்குச்சந்தைகளின் கடும் வீழ்ச்சி காரணமாக, ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது.

  Must Read : வானிலை தகவல் தொடர்பாக யூ டியூப் தொடங்கி சாதனை படைக்கும் மாணவர் - விவசாயிகளுக்காக வானிலை செயலியை உருவாக்க முயற்சி

  அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீதான தடை நீக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

  உலகின் மிகப்பெரிய வெள்ளை வைரக்கல், ஜெனிவாவில் ஏலம் விடப்பட்டது. இந்திய மதிப்பில் 150 கோடி ரூபாய்க்கு வைரக்கல் ஏலம் எடுக்கப்பட்டது.

  விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அஜித்குமார் உணவக உரிமையாளராக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  தாய்லாந்தில் நடைபெறும் ஊபர் மற்றும் தாமஸ் கோப்பை போட்டியில் ஆடவர் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றதால் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி ஆகியுள்ளது.

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள 60வது லீக் போட்டியில் பெங்களூரு-பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Today news, Top News

  அடுத்த செய்தி