பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு விசாரணையில் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசானி' புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திர கடற்கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வன்முறையை கட்டுப்படுத்த முக்கிய நகரங்களில் ராணுவம் குவிப்பு. காலிமுகத்திடலில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேற காவல்துறை உத்தரவு.
இலங்கையில் இன்று காலை 7 மணி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமலுக்கு வரவுள்ளது. இது நாளை காலை 7 மணி வரை நீடிக்கும்.
குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வுக்கு 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பழைய சான்றுதழ் கட்டணமே வசூலிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மறு ஆய்வு பணிகள் முடியும்வரை தேசத்துரோக வழக்கு பதிவு செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டை, ஏற்றுமதியில் முதல் மாநிலமாக உருவாக்குவதே இலக்கு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தான் உயிருடனே இருப்பதாகவும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதால் வழக்கம்போல் செயல்பட சில காலம் பிடிக்கும் என்றும் நித்யானந்தா விளக்கம் அளித்துள்ளார்.
காரைக்குடி அருகே நூற்றாண்டு பாரம்பரிய தேரோட்டத்திற்காக ரயில் பாதையில் இருந்த மின்சாரக் கம்பிகள் அகற்றப்பட்டதால், பல்லவன் விரைவு ரயில் டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கலில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நிதிநிலை குறித்த புள்ளி விவரங்களில் குளறுபடி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள உச்சிகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகாசியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் வாணவேடிக்கையுடன் அம்மன் பூப்பல்லக்கில் வரும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமை தாங்கி நடத்தும் சர்வதேச அளவிலான கொரோனா தொடர்பான உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்க உள்ளார்.
பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் தவிக்கும் நாடு இலங்கை மட்டுமல்ல என சர்வதேச நிதியமும், ஐ.நா-வும் தெரிவித்துள்ளது.
டாடா நிறுவனத்தின் நெக்சான் EV MAX எலெக்ட்ரானிக் கார் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னையில் ரெப்கோ வங்கி மற்றும் ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் புதிய திட்டங்களை மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தொடங்கி வைத்தார்.
Must Read : கரையைக் கடந்தது அசானி புயல்... தமிழ்நாட்டில் 5 நாள்களுக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தொலைக்காட்சியான அல் ஜசீரா தொலைக்காட்சி, பெண் பத்திரிகையாளர் ஷரீன் அபு அக்லே உயிரிழந்தார்.
இலங்கையில் புதிய பிரதமரை விரைவில் நியமிப்பேன் என்றும் நாடு ஸ்திரத்தன்மையை எட்டியதும் அதிபரின் உச்சபட்ச அதிகாரத்தை விட்டுத் தருவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சைப்ரஸ் நாட்டில் நடைபெறும் சர்வதேச தடகள ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை, ஜோதி யர்ராஜி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ்அணி வென்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Headlines, Sri Lanka, Today news, Top News