Home /News /tamil-nadu /

Headlines Today : பேரறிவாளன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை... தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு - தலைப்புச் செய்திகள் (மே 11-2022)

Headlines Today : பேரறிவாளன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை... தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு - தலைப்புச் செய்திகள் (மே 11-2022)

பேரறிவாளன் விடுதலை விவகாரம்!

பேரறிவாளன் விடுதலை விவகாரம்!

Headlines Today : தன்னை விடுவிக்கக் கோரி, பேரறிவாளன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

    ராஜீவ் கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி, பேரறிவாளன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

    இலங்கையில் தொடர் வன்முறையால் நாளை வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது சொத்துக்களை சேதப்படுத்துவோரை சுட்டுத்தள்ள உத்தரவு.

    அசானி புயலால் ஆந்திர கடலோரப் பகுதியில் அதி கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், மின்சாரக் கம்பங்கள் அடியோடு சாய்ந்தன.

    தமிழகத்தில் விரைவில் 3 ஆயிரம் காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு.

    பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழா, 13 மற்றும் 14ம் தேதிகளில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் 15ஆம் தேதி காலை 6 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள், சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    புதுச்சேரியில், சவர்மா விற்பனை செய்யப்படும் உணவகங்களில் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

    Must Read : அக்காவுக்கு பாலியல் தொல்லை.. இளைஞரை அடித்துக்கொன்ற தம்பி - தருமபுரியில் பரபரப்பு

    நடிகை மும்தாஜ் வீட்டு பணிப்பெண் ஒருவர், தனக்கு உதவி செய்யுமாறு பொதுமக்கள் மூலம் காவல் துறையை நாடினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பத்மாவதி பரிணயம் உற்சவம் எனப்படும் வருடாந்திர திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக தொடங்கியது.

    பிரான்சில் நடைபெறும் கான்ஸ் திரைப்பட விழாவில் ஏ.ஆர். ரஹ்மான். நயன்தாரா உள்ளிட்ட பல இந்திய திரைப்பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர்.

    இந்தியா- நேபாளம் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சுதன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் லக்னோவை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி; பிளேஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேற்றம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Headlines, Today news, Top News

    அடுத்த செய்தி