Home /News /tamil-nadu /

Headlines Today : மகிந்தா ராஜபக்சவின் வீடு தீவைத்து எரிப்பு.. 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது - தலைப்புச் செய்திகள் (மே 10-2022)

Headlines Today : மகிந்தா ராஜபக்சவின் வீடு தீவைத்து எரிப்பு.. 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது - தலைப்புச் செய்திகள் (மே 10-2022)

ராஜபக்சவின் வீடு தீவைத்து எரிப்பு...

ராஜபக்சவின் வீடு தீவைத்து எரிப்பு...

Headlines Today : இலங்கையில் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து மகிந்தா ராஜபக்ச விலகிய நிலையில், நாடு முழுவதும் வன்முறை அரங்கேறிவருகிறது.

  இலங்கையில் பிரதமர் பதவியிலிருந்து மகிந்தா ராஜபக்ச விலகிய நிலையில், நாடு முழுவதும் வன்முறை அரங்கேறிவருகிறது. பிரதமர் மகிந்தா ராஜபக்சவின் வீடும், பூர்வீக வீடும் தீவைத்து எரிக்கப்பட்டன.

  தமிழகத்தில் பதினோறாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது.

  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கேரளாவைச் சேர்ந்த சயானிடம் தனிப்படை போலீசார் 4 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

  சென்னையில் நள்ளிரவில் பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  தமிழகத்தின் உச்சபட்ச மின்தேவையை பூர்த்தி செய்தது மட்டுமின்றி, மின்சார உற்பத்தியை அதிகரித்து வெளிமாநிலங்களுக்கும் விற்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

  பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஒப்பந்த ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

  மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் கிரானைட் குவாரிகளை அரசே ஏற்று நடத்த தயாராக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

  தொலைதூரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, தனியாக இருக்கை வழங்கப்படாது என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

  இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. பங்குச் சந்தைகளும் சரிவை கண்டுள்ளன.

  காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்ட தலைவர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கட்சியின் தலைவர் சோனியாகாந்தி வலியுறுத்தியுள்ளார்.

  ஆந்திரப்பிரதேச மாநிலம், நெல்லூர் அருகே திருமணத்திற்கு பெண் வீட்டார் சம்மதிக்காததால் காதலியை சுட்டுக் கொன்ற காதலன் தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

  Must Read : நள்ளிரவில் சென்னையை குளிரவைத்த கோடை மழை - மகிழ்ச்சியில் மக்கள்!

  கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தின் மல்பே கடற்கரையில் மூன்று தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட மிதக்கும் பாலம், கடல் சீற்றத்தால் சேதமடைந்தது.

  மதுரையில் நடிகர் கார்த்தியை அரசியலுக்கு அழைப்பது போன்று பல்வேறு போஸ்டர்கள் அவர்களது ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ளது.

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.

  20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணியில் மாரீஸ்வரன், கார்த்திக் ஆகிய இரண்டு தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Tamil News, Top News

  அடுத்த செய்தி