தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று துவங்குகிறது. 9,38,337 மாணவர்கள் தேர்வை எழுத உள்ளனர்.
மதுரையில் 10 கிலோ பழைய கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், 5 ஷவர்மா கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சமூக வலைத்தள விளம்பரங்களை நம்பி கிரிப்டோ கரன்சியில் காவலர்கள் முதலீடு செய்து சேமிப்பு பணத்தை இழந்துள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு ஆதீனம் தொடர்பான விஷயங்களில் தலையிடாமல் இருப்பதே நல்லது என்றும், பாரம்பரிய விஷயங்களில் முடிவு எடுக்கும் முன்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் அரசு கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் கோவை மாவட்ட பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் தெரிவித்துள்ளார்.
தேனி அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மனைவியை கணவன் வெட்டிக்கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகம் இந்தியாவின் ஆன்மீக தலைமையிடமாக திகழ்வதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல் அருகே மலைக்கிராமத்தில் உரிய சாலை வசதி இல்லாததால் உடல்நலம் குன்றிய முதியவரை உறவினர்கள் டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய பயிற்சி முகாம் நாளை தொடங்குகிறது.
நாடு முழுவதும் கத்திரி வெயில் மக்களை வாட்டி வரும் நிலையில், வெப்பத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
விருத்தாசலம் அருகே இறந்த விவசாயிகள் பெயரில் பயிர்க்கடன் பெற்று ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த கூட்டுறவு சங்க தலைவர், செயலாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
முதுமலை புலிகள் காப்பகம் செல்லும் சாலையை புலி ஒன்று கடந்து செல்லும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் போதுமான பேருந்து வசதி இல்லாததால் கல்லூரி மாணவிகள் பேருந்தில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கோண்டு வருகின்றனர்.
கோடநாடு பங்களா கொலை, கொள்ளை வழக்கில் பிஜின் குட்டியின் சகோதரர் உட்பட 2 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
கொரோனாவால் இந்தியாவில் தான் அதிக உயிரிழப்பு என உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹைதராபாத் வந்த பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்
மத்தியப் பல்கலைக்கழகங்களில் பட்ட படிப்புகளில் சேர்வதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பத்திற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 71வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், போரால் இதுவரை 6731 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.
கால்பந்து வீரர் மாரடோனா HAND OF GOD என்று புகழ் பெற்ற கோல் அடித்த போது அணிந்திருந்த ஜெர்சி சுமார் 71 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. விளையாட்டு நினைவுச் சின்னம் ஒன்றுக்கு கொடுக்கப்படும் அதிகபட்ச தொகை இதுவாகும்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.