நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்பதற்காக தான் படித்த பட்டங்களை கிழித்து எறிந்தார்: இல.கணேசன் அண்ணன் கோபாலன் பேட்டி

நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்பதற்காக தான் படித்த பட்டங்களை கிழித்து எறிந்தார்: இல.கணேசன் அண்ணன் கோபாலன் பேட்டி

நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்பதற்காக தான் படித்த பட்டங்களை கிழித்து எறிந்தார் என இல.கணேசன் அண்ணன் கோபாலன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
50 ஆண்டுகால அரசியல் பயணத்தில் இருந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது குடும்பத்தார் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அப்பொழுது அவர்கள் நம்மிடம் அளித்த பேட்டியில், வருவாய் துறையில் மாவட்ட ஆட்சியராக ஓய்வு பெற்றிருக்கு வேண்டியவர் இல.கணேசன் நாட்டிற்காக அரசு வேலையைவிட்டு விலகிவிட்டார்.

சின்ன வயதில் இருந்து ஆர்.எஸ்.எஸ் தான், சுமார் 50 ஆண்டுகாலம் அவர் பொது வாழ்வில் உள்ளார். நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்பதற்காக தான் படித்த பட்டங்களை கிழித்து எறிந்தார். சான்றிதழ் இருந்தால் வேறு வேலைக்கு போகலாம் என்ற எண்ணம் தோன்றும் என்பதால் அதை கிழித்துவிட்டு ஆர்.எஸ்.எஸ்-ல் சேர்ந்தார்.

பொது வாழ்க்கைக்கு வரவேண்டும் என வைராக்கியமாக இருந்தார்.
தற்போது இப்பதவி தாமதமாக கிடைத்தாலும் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இல.கணேசன் அண்ணன் கோபாலன் கூறுகிறார்.

ரொம்ப சந்தோஷமாக உள்ளது 50 ஆண்டுகள் நாட்டுக்காக உழைத்துள்ளார். அதற்கு பலனாக ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது
ஆளுநர் குடும்பத்தார் என்பதை விட, இல.கணேசன் குடும்பத்தார் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் ஆர்.எஸ்.எஸ். என்பதால் திருமணம் செய்துகொள்ளவில்லை. எங்கள் குடும்பம் அனைவரும் அவருக்கு உறுதுணையாக இருந்தோம் என்கிறார் இல.கணேசன் அண்ணன் மகள் காயத்ரி.
Published by:Esakki Raja
First published: