• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கட்டிய மனைவியை மதுபோதையில் எரித்து கொன்ற கணவன்

கட்டிய மனைவியை மதுபோதையில் எரித்து கொன்ற கணவன்

Youtube Video

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, குடும்பத் தகராறில், மதுபோதையில் மனைவி மீது மண்ணெ்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார் கணவன். சிகிச்சை பலனின்றி மனைவி பலியான நிலையில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு கொலையில் முடிந்தது ஏன்?

  • Share this:


    தாய்மாமன் மகள் அமிர்தவள்ளியை காதலித்து திருமணம் செய்து கொண்ட சேகர், அவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார். காதல் கணவன், கொலைக் குற்றவாளியானது ஏன்?

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சுனையக்காடு ஊராட்சிக்குட்பட்ட குமாலாங்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் 39 வயதான சேகர். இவர் 13 ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்து விட்டு, 3 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினார். 2 ஆண்டுகளுக்கு முன், தாய்மாமன் மகளான மாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 19 வயது அமிர்தவள்ளியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் சேகர் குடிக்கு அடிமையானார். குடும்பத்தைக் கவனிக்காமல் கணவர் விட்டதால், அமிர்தவள்ளி 100 நாள் வேலை மற்றும் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார்.

    மது போதைக்கு அடிமையான சேகர், குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில்தான் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு, மது போதையில் வீட்டிற்கு வந்த சேகர், மனைவியை அடித்து தகராறில் ஈடுபட்டார்.

    ஒரு கட்டத்தில், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை மனைவி மீது ஊற்றித் தீயும் வைத்து விட்டார் சேகர். தீப்பற்றிய நிலையில் அமிர்தவள்ளி அலறியபடியே வீட்டிற்கும் அங்கும் இங்கும் ஓடி பின்னர் எரிந்தபடியே வெளியே வந்து திண்ணையில் அமர்ந்துகொண்டார். சத்தம் கேட்ட சேகரின் தாய் பாப்பா உள்ளிட்டோர் ஓடி வந்து அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    மேலும் படிக்க...சென்னையில் இன்று (16-02-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

    அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலையில் அமிர்தவள்ளி உயிரிழந்தார். மதுபோதை தான் இந்தக் கொலைக்கு காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளனர் உறவினர்கள் புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். குடும்பத் தகராறில் கணவனே மனைவியை எரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: