ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சட்டமன்றம் வந்த ஆளுநர்...தமிழ்நாடு வாழ்க என முழக்கமிட்ட எம்.எல்.ஏ.க்கள்...!

சட்டமன்றம் வந்த ஆளுநர்...தமிழ்நாடு வாழ்க என முழக்கமிட்ட எம்.எல்.ஏ.க்கள்...!

ஆளுநர் உரை

ஆளுநர் உரை

சட்டமன்றத்திற்குள் ஆளுநர் நுழைந்ததும் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தமிழ்நாடு வாழ்க என முழக்கமிட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். இந்த சூழலில்தான் ஆளுநர் உரையுடன் இன்று சட்டமன்றம் கூடியது.

சட்டமன்றத்தில் உரையாற்ற வந்த ஆளுநரை சபாநாயகர் அப்பாவு வரவேற்று அழைத்து வந்தார். ஆளுநர் சட்டமன்றத்திற்கு உள்ளே நுழைந்ததும் திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள், "தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க" என முழக்கம் எழுப்பினர். எங்கள் நாடு தமிழ்நாடு, எங்கள் தமிழ்நாடு எனவும் முழக்கங்கள் எழுப்பினர். எனினும், ஆளுநர் தன்னுடைய உரையை தொடங்கி பேச ஆரம்பித்தார்.

First published:

Tags: DMK, RN Ravi, TN Assembly