வாக்காளர்களின் ஆதார் மூலம் செல்போன் எண்களை எடுத்த பாஜக - உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

வாக்காளர்களின் ஆதார் மூலம் செல்போன் எண்களை எடுத்த பாஜக - உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை உயர் நீதிமன்றம்

பாஜகவின் புதுச்சேரி கிளை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்களை எடுத்து வாக்காளர்களிடம் வாட்ஸ் அப் மூலம் தேர்தல் பிரச்சாரம் நடத்த முயற்சி செய்ததாக எழுந்த பகீர் குற்றச்சாட்டை அடுத்து உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

 • Share this:
  பாஜகவின் புதுச்சேரி கிளை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்களை எடுத்து வாக்காளர்களிடம் வாட்ஸ் அப் மூலம் தேர்தல் பிரச்சாரம் நடத்த முயற்சி செய்ததாக எழுந்த பகீர் குற்றச்சாட்டை அடுத்து உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

  இது போன்று அரசியல் கட்சி செயல்பட்டதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை நாளை வெள்ளிக்கிழமைக்குள் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  புதுச்சேரியில் 'வாட்ஸ் ஆப் குரூப்' தொடங்கி பிரசாரம் செய்யும் பா.ஜ.க.வுக்கு எதிரான புகாருக்கு தேர்தல் ஆணையம் நாளை பதில் அளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

  புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

  பொதுவாக வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர், முகவரி மட்டுமே இருக்கும். அதில் செல்போன் எண் இருக்காது. ஆனால், ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் செல்போன் எண்ணை பெற்று, 'வாட்ஸ்அப் குழுக்கள்' தொடங்கி பா.ஜ.க.வினர் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.

  இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், 'வாட்ஸ்அப் குரூப்கள் உருவாக்கி செய்யப்படும் பிரசாரம் குறித்து மனுதாரர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என வாதிட்டார்.

  அதையடுத்து நீதிபதிகள், 'அரசியல் கட்சிக்கு எப்படி வாக்காளர்களின் செல்போன் எண்கள் கிடைத்தன? அந்த செல்போன் எண்களை அரசியல் கட்சி எப்படி பயன்படுத்தலாம்?' என சரமாரியாக கேள்வி எழுப்பினர். இது மிகவும் சீரியஸான கேள்வி ஒரு முன்னணி கட்சி வாக்காளர்களின் செல்போன் எண்களை ஆதார் மூலம் திரட்டி தேர்தல் பிரச்சாரத்திற்காக இதைச் செய்ததாக மனுதாரர் முக்கியமான பிரச்னையை எழுப்பியுள்ளார்.’ என்று கூறி தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

  ஆனந்த் தன் மனுவில், புதுச்சேரி, மாஹே, ஏனாம் பகுதியில் வாக்காளர்கள் தங்கள் மொபைலில் மெசேஜ்கள் வரக்கண்டனர், அதில் வாக்குச்சாவடி மட்ட வாட்ஸ் அப் குழுவுடன் இணைய லிங்க் கொடுக்கப்பட்டிருந்ததையும் கண்டனர். இந்த வாட்ஸ் அப் குழு பாஜக உருவாக்கியது என்று புகார் எழுப்பியிருந்தார்.
  Published by:Muthukumar
  First published: