தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சிக்குத் தடை

தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் இருக்கும் கோவிலில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்று கூறி தடை விதித்தனர்.

Web Desk | news18
Updated: December 7, 2018, 2:28 PM IST
தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சிக்குத் தடை
தஞ்சாவூர் பெரிய கோயில்
Web Desk | news18
Updated: December 7, 2018, 2:28 PM IST
தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பின் சார்பில் நடக்க இருந்த தியான நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.

தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பின் சார்பில் தியான நிகழ்ச்சி நடக்க இருந்தது.

ஆன்மீகப் பயிற்சி நிகழ்ச்சிக்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்படுகிறது. இதனால், பழமையான கட்டுமானம் பாதிக்கப்படுவதாக கூறி, இதற்க்குத் தடை கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இன்று பிற்பகலில் மனுவை விசாரித்த நீதிமன்றம், தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் இருக்கும் கோவிலில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்று கூறி தடை விதித்தனர்.

யமுனை ஆற்றின் கரையில் இது போன்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்பட்டதாக கூறி, பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதித்ததை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் வரும் 10-ம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

Also See..
Loading...
First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...