Home /News /tamil-nadu /

பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி. செல்வத்தை கைது செய்ய இடைக்காலத் தடை...!

பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி. செல்வத்தை கைது செய்ய இடைக்காலத் தடை...!

வினோஜ் பி. செல்வம்

வினோஜ் பி. செல்வம்

Vinoj P Selvam: இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி வினோஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். செய்தித்தாளில் வந்ததை டிவிட்டரில் பதிவிட்டதாகவும், கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், பாஜக-விற்கு பரப்புரை செய்யும் வகையிலேயே பதிவிட்டதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :
இரு பிரிவினரிடையே வெறுப்புணர்வை தூண்டியதாக பதிவான வழக்கில் தமிழக பாஜக இளைஞர் அணி தலைவரான வினோஜ் பி. செல்வத்தை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோவில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக தமிழக பாஜக இளைஞர் அணி தலைவரான வினோஜ் பி. செல்வம் அவரது டிவிட்டர் பதிவிட்டிருந்தார். அவரது பதிவு உண்மைக்கு மாறான தகவலுடனும், வதந்தியை பரப்பி, இரு பிரிவினரிடையே வெறுப்பு மற்றும் பகைமையை உருவாக்கி, பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

அதில் விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸார், வினோஜ் பி. செல்வம் மீது கலகத்தை ஏற்படுத்துதல், இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி வினோஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். செய்தித்தாளில் வந்ததை டிவிட்டரில் பதிவிட்டதாகவும், கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், பாஜக-விற்கு பரப்புரை செய்யும் வகையிலேயே பதிவிட்டதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

Also read... கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? - உயர் நீதிமன்றம் கேள்வி!

இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரியதால் வழக்கை பிப்ரவரி 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை வினோஜை கைது செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: BJP, Madras High court

அடுத்த செய்தி