கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத தனிநபர், நிறுவனங்களுக்கு அபராதம் வசூலிக்கும் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத தனிநபர், நிறுவனங்களுக்கு அபராதம் வசூலிக்கும் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை உயர்நீதிமன்றம்.

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத தனிநபர் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் வசூலிக்கும் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு பின்னர் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தளர்வுகளை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதற்காக, கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அபராதம் விதிக்கும் நடைமுறையை தமிழக அரசு அறிவித்து, அதை கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டுள்ளது.

சுகாதாரத்துறைச் செயலாளர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பின்படி, தனிமைப்படுத்தும் விதிகளை மீறுதல், பொது இடத்தில் முகக்கவசம் அணியாதது, தனி மனித இடைவெளியை பின்பற்றாதது, பொதுவெளியில் எச்சில் துப்புதல், முடிதிருத்தகம், ஸ்பா, ஜிம் ஆகியவற்றிற்கான நிலையான செயல்பாட்டு விதிகளை பின்பற்றாதது குற்றம் என்றும், அதற்காக 200 ரூபாயில் தொடங்கி 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க புதிய அறிவிப்பு வகை செய்கிறது.

1939ஆம் ஆண்டின் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர், காவல்துறை, சுகாதாரத்துறை ஆகியோருக்கு அதிகாரம் இல்லாததால், அவர்களுக்கு அதிகாரம் அளித்து அந்த சட்டத்தில் திருத்தமும் (பிரிவு 76(2)) கொண்டுவரப்பட்டது.

அரசிதழில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி சென்னை ராமாபுரத்தை சேர்ந்த 77 வயதான ஆர்.முத்துக்கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

Also read... ’குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்’ - பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உறுதி..அந்த மனுவில், விதிகளை பின்பற்றாதவர்கள் மீதி நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவில், தனிநபர் விதிகளை பின்பற்றாவிட்டால் அது குற்றம் என சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை ஆளுனர் அறிவிக்காமல் சுகாதரத்துறைச் செயலாளர் அளவிலான நிர்வாக உத்தரவாகவே வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே அபராதம் வசூலிக்க வகைசெய்யும் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு அக்டோபர் 22ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: