ஊரடங்கை மீறி அவசியமில்லாமல் வெளியில் வந்தால் நீதிமன்றம் ஒன்றும் செய்ய முடியாது!

ஊரடங்கை மீறி அவசியமில்லாமல் வெளியில் வந்தால் நீதிமன்றம் ஒன்றும் செய்ய முடியாது!
சென்னை உயர்நீதிமன்றம்
  • Share this:
கொரானா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறி அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால், நீதிமன்றம் ஒன்றும் செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றை தடுக்க மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு மற்றும் மாநில அரசின் 144 தடை உத்தரவு தற்போது நடைமுறையில் உள்ளது.

பால், மருந்து, மளிகை மற்றும் காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்கவும், வாங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதால் சாலையில் செல்வோர்களிடம் காவல்துறையினர் கடுமையாக நடந்துகொள்வதாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.


ஊரடங்கு உத்தரவு காரணமாக உயர்நீதிமன்றம் மூடப்பட்டுள்ளதால், இந்த வழக்கை (zoom app) வீடியோ காலில் நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் விசாரித்தனர்.

அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், மாநில அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோரும் காணொளி வழியாக இணைந்திருந்தனர்.

இதுவரை காவல்துறையினர் எந்த ஒரு விதிமுறைகளையும் மீறவில்லை எனவும், ஊரடங்கை மீறியதாக 17 ஆயிரத்து 118 வழக்குகள் பதியபட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அரசின் இந்த விளக்கத்தை கேட்ட நீதிபதிகள், வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல், மனித உணர்வு மதிக்கப்பட வேண்டும் என்றும் மக்களிடம் நடுநிலையான அணுகுமுறையை கையாளவேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தினர்.

மேலும், காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் தனி மனிதனின் வாழும் உரிமை எந்த விதத்திலும் பாதிக்ககூடாது எனவும் கருத்து தெரிவித்தனர்.

இது போன்ற காலங்களில் ஊரடங்கு உத்தரவை அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியில் சென்றால் நீதிமன்றம் ஒன்றும் செய்ய முடியாது எனவும் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

Also see...
First published: March 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading