ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அறநிலையத்துறை ஒத்துழைக்காவிட்டால், எப்படி கோவில் நிலங்களை மீட்பது? நீதிமன்றம் கேள்வி

அறநிலையத்துறை ஒத்துழைக்காவிட்டால், எப்படி கோவில் நிலங்களை மீட்பது? நீதிமன்றம் கேள்வி

கோப்புப் படம்

கோப்புப் படம்

கோவில்களுக்கு சொந்தமாக தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள நிலங்களும், தானமாக கொடுக்கப்பட்ட நிலங்களும் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், அறநிலையத்துறை அதிகாரிகளின் வசதிகேற்ப தனியாருக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அறநிலையத்துறை ஒத்துழைப்பு இல்லாமல் ஆக்கிரமிப்புகளிலிருந்து கோவில் நிலங்களை மீட்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான ஆ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள வழக்கில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பையூர் வீர ஆஞ்சநேய சாமி மற்றும் கோதண்டராம சாமி கோவில்கள், நாகமங்கலம் உள்ள அனுமந்தராய சாமி கோவில், பாலேகுளி பட்டாளம்மன் மற்றும் பெரியமலை பெருமாள் கோவில், பழைய அரசம்பட்டி வரதராஜ பெருமாள் கோவில், கூலிகானபள்ளி காகாசி விஸ்வநாதர் கோவில் ஆகியவற்றின் சொத்துகள் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டும், தனியாருக்கு விற்கப்பட்டும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Also read... 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் சுணக்கம்

இந்த கோவில்களுக்கு சொந்தமாக தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள நிலங்களும், தானமாக கொடுக்கப்பட்ட நிலங்களும் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், அறநிலையத்துறை அதிகாரிகளின் வசதிகேற்ப தனியாருக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

Also read... மதுரை நெல்பேட்டை அருகே கட்டடம் இடிந்து தலைமைக் காவலர் மரணம்

குறிப்பாக நாகமங்கலத்தில் தமிழக அரசு துறைகளிடமோ, அறநிலையத்துறையிடமோ அனுமதி பெறாமல் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 40,000 சதுர அடி அளவிற்கு, 50 அடி ஆழத்திற்கு பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளதாகவும், கிரானைட் பாறைகள் சட்டவிரோதமாக எடுத்துச்செல்லப்பட்டதாகவும், டிசம்பர் 10ஆம் தேதி வரை இது நடந்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Also read... கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மறைவிற்கு கிராம மக்கள் அஞ்சலி!

இதுதொடர்பாக கடந்த மே மற்றும் நவம்பர் மாதங்களில் அளித்த புகாரில், பத்திர பதிவுத்துறையில் சேலம் உதவி ஐ.ஜி. பிறப்பித்த உத்தரவில் இந்த கோவில்களின் நிலங்கள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யச் சொல்லியும் அறநிலையத்துறை அதிகாரிகள் வழஙகவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

கோவில் நிலங்களை பாதுகாப்பதற்கு ஏதுவாக வேலி அமைப்பதற்காக 10 ஆயிரம் ரூபாய் அனுப்பியும், அதையும் பயன்படுத்தவில்லை என குறிப்பிட்டு, இந்த 7 கோவில்களின் நிலங்களையும் பாதுகாக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களின் விவரங்களை வருவாய் துறையினர் கேட்கும்போது, அதை வழங்குவதற்கு அறநிலையத்துறைக்கு என்ன தயக்கம் என நீதிபதி கேள்வி எழுப்பியதுடன், போதிய ஒத்துழைப்பு தராவிட்டால் வருவாய்த் துறையால் நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை ஆணையர் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் மனுதாரர் ராதாகிருஷ்ணன் அளித்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தமிழக அரசு, அறநிலையத்துறை, கோவில்களின் நிர்வாகம் உள்ளிட்டோர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை விசாரணையை ஜனவரி 4ஆம் தேதி தள்ளிவைத்துள்ளார்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Chennai High court, Temple land