HOME»NEWS»TAMIL-NADU»hc said that individual complaints related to land grabs cannot be considered as public interest litigation vin
நில ஆக்கிரமிப்புகள் தொடர்பான தனி நபர் புகார்களை பொது நல வழக்காக கருத முடியாது - நீதிமன்றம்!
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்க வேண்டும் என்றும் அந்த புகார்களை சட்டப்படி பரிசீலித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரலாம் எனவும், பொது நல வழக்காக தொடர முடியாது எனவும் தெளிவுபடுத்தினர்.
நில ஆக்கிரமிப்புகள் தொடர்பான தனி நபர் புகார்களை பொது நல வழக்காக கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசு நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசு நிலம் ஆக்கிரமிப்புக்கு அனுமதிக்க முடியாது என தெளிவுபடுத்தினர். அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்வதை எதிர்த்த தனி நபர்கள் புகார்களை, பொது நல வழக்காக கருத முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்க வேண்டும் என்றும் அந்த புகார்களை சட்டப்படி பரிசீலித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரலாம் எனவும், பொது நல வழக்காக தொடர முடியாது எனவும் தெளிவுபடுத்தினர்.
இந்த வழக்கை பொறுத்தவரை, சட்டவிதிகளை பின்பற்றி மனுதாரரின் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தனி நபர் புகார்கள் தொடர்பான வழக்குகளை பொது நல வழக்காக விசாரணைக்கு எடுக்க கூடாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.