Home /News /tamil-nadu /

மறைமுக தேர்தல் நடத்த தடை கோரி திருமாவளவன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

மறைமுக தேர்தல் நடத்த தடை கோரி திருமாவளவன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

திருமாவளவன்

திருமாவளவன்

  • News18
  • Last Updated :
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த வகை செய்யும் அவசர சட்டத்துக்கு தடை விதிக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சிகளில் மேயர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பாக, கடந்த நவம்பர் 19-ம் தேதி தமிழக அரசு, அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

இந்த சட்டத்துக்கு தடை விதிக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், மேயர் மற்றும் தலைவர் ஒரு கட்சியை சேர்ந்தவராகவும், பெரும்பான்மை உறுப்பினர்கள் வேறு கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருந்தால், மன்றத்தை சுமூகமாக நடத்த முடியாது என்பதால் இப்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது என பிறப்பிக்கப்பட்ட அவசரசட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசியல் கட்சி அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சாசனம் கூறவில்லை எனவும், மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு நேர்முக தேர்தல் தான் நடத்தப்பட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மறைமுக தேர்தல் நடத்த மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவியும், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர்கள் பதவியும் வெவ்வேறானவை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த வகை செய்யும் அவசர சட்டத்தை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி சாஹி மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மறைமுக தேர்தலால் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட முடியாது என்பதால் இந்த அவசர சட்டம் அரசியல் சட்டம் மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமானது என திருமாவளவன் தரப்பில் வாதிடப்பட்டது.

நேர்முக தேர்தலை மறைமுக தேர்தலாக மாற்றியதை ஜனநாயக விரோதமானது என்றோ அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றோ கூற முடியாது என தெரிவித்த நீதிபதிகள், ஒருவர்(சுயேட்சை வேட்பாளர்களை குறிப்பிட்டு) தன்னை குறிப்பிட்ட பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டுமென கூறுவது சட்டப்படியான உரிமைதானே (statutory rights) தவிர, அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமை (fundamental right) இல்லை என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Local Body Election 2019

அடுத்த செய்தி