Home /News /tamil-nadu /

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனத்தை ரத்து செய்தது நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனத்தை ரத்து செய்தது நீதிமன்றம்!

அக்ரி கிருஷ்ண மூர்த்தி

அக்ரி கிருஷ்ண மூர்த்தி

  • News18
  • Last Updated :
    திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவராக, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 522 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் தினமும் 3 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட சங்க துணைப்பதிவாளர், அம்மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தேர்ந்தெடுத்திருப்பதாக கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அறிவித்தார்.

    தேர்தல் நடத்தாமலே, அரசியல் செல்வாக்கின் காரணமாக, கூட்டுறவு சங்க விதிகளை மீறி முன்னாள் அமைச்சர் கிருஷ்ணமூர்த்திக்கு திருவண்ணாமலை மாவட்ட பால்
    உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் பதவி வழங்கப்பட்டதை எதிர்த்து திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மணி, சுதாகர் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவராக, அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Agri krishnamoorthi

    அடுத்த செய்தி