முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழக முதலமைச்சர் சார்பில் சீமான் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

தமிழக முதலமைச்சர் சார்பில் சீமான் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

சீமான்

சீமான்

அரசுத் தரப்பின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி பாரதிதாசன், அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

  • Last Updated :

தமிழக முதலமைச்சர் சார்பில் சீமான் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், சீமான் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது

கடந்த 2019 ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து பேசியதாகவும், வேண்டுமென்றே களங்கம் கற்பிக்கும் நோக்கில் அவதூறாக பேசியதாகவும், அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் சார்பில் நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், அரசாணையை எதிர்த்தும் சீமான் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

Also read... ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் - சென்னை உயர் நீதிமன்றம்

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முகமது ரியாஸ், ஏற்கனவே இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், மீண்டும் அதே கோரிக்கையுடன் தொடர்ந்துள்ள இந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென வாதிட்டார்..

அரசுத் தரப்பின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி பாரதிதாசன், அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: CM Palanisamy, Madras High court, Seeman