முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆயுள் கைதியை விடுவிக்க மறுப்பு தெரிவித்த அரசின் உத்தரவில் தலையிட மறுத்த நீதிமன்றம்!

ஆயுள் கைதியை விடுவிக்க மறுப்பு தெரிவித்த அரசின் உத்தரவில் தலையிட மறுத்த நீதிமன்றம்!

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

கோவையில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை கொலை செய்த வழக்கில், யாசுதீன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 2001ம் ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் ஆய்வு செய்ய வந்த சிறைத்துறை டி.ஐ.ஜி.யை மிரட்டிய வழக்கிலும் தண்டிக்கப்பட்டார்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், சமூகத்தில் மதரீதியிலான பிரச்னைகள் ஏற்படும் எனக் கூறி ஆயுள் கைதியை முன்கூட்டியே விடுவிக்க மறுத்த தமிழக அரசின் உத்தரவில் தலையிட  சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

கோவையில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை கொலை செய்த வழக்கில், யாசுதீன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 2001ம் ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் ஆய்வு செய்ய வந்த சிறைத்துறை டி.ஐ.ஜி.யை மிரட்டிய வழக்கிலும் தண்டிக்கப்பட்டார்.

இந்நிலையில், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். பிறந்த நாள்களின் போது, ஆயுள் கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்யும் அரசாணைகளின் கீழ் யாசுதீனை முன் கூட்டி விடுவிக்க கோரி  அளித்த மனுவை நிராகரித்த அரசு உத்தரவை எதிர்த்து அவரது தாய் ஜெய்தூன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு,  நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் நக்கீரன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை கொலை செய்த வழக்கில் தண்டிக்கப்பட்ட யாசுதீனை விடுதலை செய்தால் மதரீதியாக பிரச்னைகள் ஏற்படும் எனவும், கைதியின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அளிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் முன்கூட்டி விடுதலை கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், ஆயுள் கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்யும்படி ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனவும் கூறினர்.

Also read... நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு சிறை தண்டனை - உயர் நீதிமன்றம் அதிரடி

மேலும், இந்த வழக்கில் ஆயுள் கைதியின் உயிருக்கு அச்சுறுத்தல், விடுதலை செய்தால் மதரீதியாக பிரச்னை ஏற்படும் என்பன போன்ற அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, யாசுதீனை முன்கூட்டி விடுதலை செய்ய மறுத்துள்ளது எனத் தெரிவித்த நீதிபதிகள், அரசு உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக்கூறி, அரசு உத்தரவில் தலையிட மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தனர்.

First published:

Tags: Madras High court