Home /News /tamil-nadu /

7.5 சதவீத இடஒதுக்கீட்டை புதுச்சேரி அரசு பள்ளி மாணவருக்கு வழங்க நீதிமன்றம் மறுப்பு!

7.5 சதவீத இடஒதுக்கீட்டை புதுச்சேரி அரசு பள்ளி மாணவருக்கு வழங்க நீதிமன்றம் மறுப்பு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இடஒதுக்கீட்டு பலனை, புதுச்சேரி மாநிலத்தில் படித்த மாணவர்களுக்கு நீட்டித்து வழங்கி உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டை புதுச்சேரி அரசு பள்ளி மாணவருக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை வழங்க கோரி விழுப்புரம் மாவட்டம், குமுளம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், புதுச்சேரி ஆர்.எஸ்.பாளையத்தில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் அரசு பள்ளியில் படித்த போதும், தமிழகத்தைச் சேர்ந்த தனக்கு புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேரமுடியாது என்பதால், தமிழகத்தை சேர்ந்தவன் என்ற அடிப்படையில் தமிழக அரசு அறிவித்துள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்தும் கவுன்சிலிங்குக்கு அழைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

Also read... ஜனவரியில் திருவொற்றியூருக்கு மெட்ரோ ரயில் : ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும் என்பதால் மனுதாரருக்கு இந்த சலுகை வழங்க முடியாது என கூறப்பட்டிருந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி துரைசாமி, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இடஒதுக்கீட்டு பலனை, புதுச்சேரி மாநிலத்தில் படித்த மாணவர்களுக்கு நீட்டித்து வழங்கி உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Reservation

அடுத்த செய்தி