அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உயிர் பலி வேண்டுமா என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி அப்துல்கலாம் உதவியாளராக இருந்த பொன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், பலியான சுஜித் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன், சேஷசாயி அமர்வு, அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உயிர் பலி வேண்டுமா என்று கேள்வி எழுப்பினர். மேலும் தொடர் நேரலை செய்ததை தவிர எந்த ஊடகங்களும் சமூக பொறுப்புடன் செயல்படவில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
தொடர்ந்து மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்ததோடு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து ஊடகங்களும் முயற்சிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
மேலும் ஒவ்வொரு தனி மனிதனும் சமூக பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசு கொண்டு வந்த விதிகள் பின்பற்றபடுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை என்றும் குற்றம்சாட்டிய நீதிபதிகள், ஆழ்துளை கிணறு அமைக்க வழங்கப்பட்ட அனுமதிகள் குறித்த ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா, இதுவரை எத்தனை ஆழ்துளை கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து பயன்படுத்தப்படாமல் உள்ள கிணறுகளின் எண்ணிக்கை எவ்வளவு, விதிகளை மீறியவர்கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது போன்ற கேள்விகளுக்கு நவம்பர் 21-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Borewell Hole, Surjith Rescue