Home /News /tamil-nadu /

7.5% இட ஒதுக்கீடு: அரசு கல்லூரிகளில் தலா 2 இடங்களை அதிகரிக்க முடியுமா? தேசிய மருத்துவ ஆணையத்திடம் உயர்நீதிமன்றம் கேள்வி

7.5% இட ஒதுக்கீடு: அரசு கல்லூரிகளில் தலா 2 இடங்களை அதிகரிக்க முடியுமா? தேசிய மருத்துவ ஆணையத்திடம் உயர்நீதிமன்றம் கேள்வி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அரசு பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்த கோரி மாணவிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

  • News18
  • Last Updated :
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் இடம் பெற்று கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு இடம் கிடைக்க செய்ய ஏதுவாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா இரண்டு இடங்களை அதிகரிக்க முடியுமா என விளக்கமளிக்க தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாததால் கடலூரைச் சேர்ந்த மாணவிகள் தர்ஷினி, மற்றும் இலக்கியா ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என நவம்பர் 20ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்த கோரி மாணவிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு முடிந்த பிறகு கிடைக்கும் 160 இடங்களில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், 12 இடங்கள் கிடைக்கும் எனவும், சில மருத்துவ கல்லூரிகள் மூலம் கூடுதல் இடங்கள் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

Also read... இன்னும் இரண்டு மாதத்திற்கு பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் - சென்னை மாநகராட்சி ஆணையர்!

இதையடுத்து, முதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு தனியார் கல்லூரிகளில் இடம் பெற்று கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 51 மாணவர்களுக்கு மருத்துவ கல்வி இடங்கள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதி, எதிர்காலத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் கடினமாக உழைத்துப் படித்தால் மருத்துவ இடம் கிடைக்கும் என்ற உத்வேகத்தை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அரசு பள்ளி மாணவர்கள் மீதான சமூகத்தின் பார்வையை மாற்ற இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் எனவும் தெரிவித்த நீதிபதி, 51 மாணவர்களுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 2 இடங்களை அதிகரிப்பது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court, Medical College, Reservation

அடுத்த செய்தி