பிரபல ரவுடி சி.டி.மணியை குண்டர் சட்டத்தில் அடைத்த சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கொலை, கொள்ளை, மிரட்டல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சி.டி.மணியை கடந்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி போரூர் பாலத்திலிருந்து தப்பியோட முயன்றபோது வளசரவாக்கம காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஜூன் 26ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
மகன் மணி மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து அவரது தந்தை பார்த்தசாரதி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், தன் மகனை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், காவல் நிலையத்தினர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கி முனையில் சி.டி.மணியை கைது செய்ததாகவும், ஆனால் போரூர் பாலத்தில் கைது செய்ததாக கதை ஜோடித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆவணங்களை தெளிவாக வழங்காமல் குண்டர் சட்டத்தில் அடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
Also read... எட்டயபுரம் ஆட்டுச் சந்தை முன்னறிவிப்பின்றி மூடல் - சாலையிலேயே வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்!
காவல்துறை தரப்பில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டதால்தான் சி.டி.மணியை கைது செய்யப்பட்டதாகவும், குற்றவழக்குகளின் தீவிரத்தை பொறுத்தே குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆவணங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Also read... சென்னையில் நாளை குறைந்த அளவில் மட்டும் மின்சார ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே!
பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழ் நகலை முறையாக வழங்கவில்லை என்றும், சில பக்கங்களில் தெளிவு இல்லை என்றும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதடிப்படையில் சி.டி.மணியை குண்டர் சட்டத்தில் அடைத்த சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்ததவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madras High court