ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனத்திற்கு இடைக்கால தடை!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் தேர்வுக்கான அறிவிப்பாணையை மருத்துவ தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. அதற்கான தேர்வு ஜூன் மாதம் 9-ம் தேதி நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது.

news18
Updated: September 12, 2019, 4:18 PM IST
ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனத்திற்கு இடைக்கால தடை!
சென்னை உயர்நீதிமன்றம்.
news18
Updated: September 12, 2019, 4:18 PM IST
தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமன நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சிவகங்கையை சேர்ந்த சோனியாகாந்தி,ராமநாதபுரத்தை சேர்ந்த கலைவாணி உட்பட 12 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் தேர்வுக்கான அறிவிப்பாணையை மருத்துவ தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. அதற்கான தேர்வு ஜூன் மாதம் 9-ம் தேதி நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது.


ஆனால் தேர்வு நடைமுறையை முறையாக பின்பற்றி வெளியிடபடவில்லை எனவும் தேர்வில் நிறைய விதிமீறல்கள் உள்ளதாகவும், மற்றும் தேர்வு பட்டியலும் நியாயமான முறையில் வெளியிடபடவில்லை.எனவே இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனத்திற்கான நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.மேலும் இது குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க மருத்துவ தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டார்.

Also see...

Loading...

First published: September 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...