மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் - உத்தரவு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் - உத்தரவு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கோப்புப்படம்

மருத்துவ மேற்படிப்புகளில், தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ - மாணவிகள், 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய மருத்துவ கல்லூரிகளில், மருத்துவ மேற்படிப்பில் படிக்கும் மாணவ- மாணவியர், படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்று நிபந்தனை உள்ளது.

இரண்டு ஆண்டுகள் பணி முடித்தால் மட்டுமே அவர்களுக்கு சான்றிதழ்கள் திரும்ப வழங்கப்படுகிறது. இதை எதிர்த்து, 276 மருத்துவ மாணவ - மாணவிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அகில இந்திய மருத்துவ படிப்பு கொள்கை விளக்க குறிப்பேட்டில் இதுபோல் எந்த ஒரு நிபந்தனையும் இல்லை என்றும், இது சட்டவிரோதமானது என்றும் அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மாணவ - மாணவிகள் இரண்டு ஆண்டுகள் பணிபுரிய வேண்டிய அவசியம் இல்லை எனவும், அவர்களின் சான்றிதழ்களை திரும்ப வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.Also read... உலக மக்கள் தொகையில் பத்தில் ஒருவர் கொரோனோ வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் - WHO தகவல்..

மேலும், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள், 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனை பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை செல்லும் என உத்தரவிட்ட நீதிபதிகள், 2 ஆண்டுகள் பணி முடித்த பிறகே, சான்றிதழ்கள் திரும்ப வழங்கப்படும் என்ற ஒப்பந்தம் சரிதான் என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

அதேசமயம், இரண்டு ஆண்டுகளுக்குள் பணி வழங்க முடியாவிட்டால், சம்பந்தப்பட்ட மாணவ - மாணவியரின் சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published: