Home /News /tamil-nadu /

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம்...! சிபிஐ விசாரணை கோரிய திமுக மனுவிற்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவு

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம்...! சிபிஐ விசாரணை கோரிய திமுக மனுவிற்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவு

  • News18
  • 1 minute read
  • Last Updated :
ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் டிஜிபி'க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைதேர்தலில் அதிமுக தரப்பினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யபட்டது.

இந்த வழக்கை சிபிஐ மாற்றக்கோரி திமுகவை வேட்பாளர் மருது கணேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக தமிழக அரசு, டிஜிபி ,அபிராமபுரம் காவல் நிலையம் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: RK Nagar

அடுத்த செய்தி