• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழிசை தொடர்ந்த வழக்கில் கனிமொழி பதிலளிக்க உத்தரவு!

தமிழிசை தொடர்ந்த வழக்கில் கனிமொழி பதிலளிக்க உத்தரவு!

கனிமொழி | தமிழிசை

கனிமொழி | தமிழிசை

பிரச்சாரத்தின்போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு 2000 ரூபாயை கனிமொழி வழங்கியதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க கனிமொழிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    நடந்து முடிந்த 17 வது மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன விட 3.47 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    இந்நிலையில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    கனிமொழி தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளதாகவும், முறையற்ற வகையில் இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது இந்த ஆட்சேபங்கள் தெரிவித்த போது, அதை தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டதாக தமிழிசை தனது மனுவில் குற்றம் சாட்டி உள்ளார்.

    மேலும் கனிமொழியின் கணவர் மற்றும் மகன் சிங்கப்பூர் பிரஜைகள் என்றும் அவர்களின் வருமான விவரங்கள் பொருத்தவரை பொருந்தாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்... அதற்கு மாறாக சிங்கப்பூர் அரசு வழங்கிய குடிமக்கள் பதிவுச் சான்றிதழை அவர் இணைத்திருக்க வேண்டும்... ஆனால் அவர் இணைக்கவில்லை... அதனால் இந்த வேட்புமனு குறைபாடானது என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் பிரச்சாரத்தின்போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு 2000 ரூபாய் வழங்கியதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மனுவுக்கு பதிலளிக்கும்படி திமுக எம்பி மற்றும் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: