HC ORDERS STATE GOVT TO ANSWER ON A PETITION SEEKING TO FILL VACANT POSTS IN CONSUMER GRIEVANCE COMMISSION VIN
நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை நிரப்பக் கோரி வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு!
கோப்புப் படம்
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அலெக்ஸ் பென்சிகர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் மாநில நுகர்வோர் குறை தீர் ஆணையத்தின் தலைவர் பதவி, 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் காலியாக இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் காலியாக உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை நிரப்பக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அலெக்ஸ் பென்சிகர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் மாநில நுகர்வோர் குறை தீர் ஆணையத்தின் தலைவர் பதவி, 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் காலியாக இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் திருநெல்வேலி, சேலம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் தவிர, பிற மாவட்டங்களில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் முழு நேர தலைவர் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், 19 மாவட்டங்களில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் நிரந்தர உறுப்பினர்கள் இல்லாததால், வழக்கு தொடரும் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த பொது நல மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்தி சுகுமார குரூப் அமர்வு, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் உத்தரவிட்டது.