எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவு

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம்
  • News18
  • Last Updated: September 30, 2018, 12:27 PM IST
  • Share this:
சென்னையில் அனுமதியின்றி சட்ட விரோதமாக வைத்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. இதற்காக சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற உள்ள விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் விழாவை முன்னிட்டு நகரின் பல பகுதிகளில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் அண்ணா சாலையில் நடைபாதைகளை ஆக்கிரமித்து விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதால் பெரும்  சிரமமாக உள்ளதாக பாதசாரிகள் தெரிவித்திருந்தனர். இதை எதிர்த்து டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார், அந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.  இந்த வழக்கை நீதிபதி மணிக்குமார் மற்றும் சுப்பரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு விசாரணையை தொடங்கியது.


அதில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் பேனர்களையும் , பாதாகைகளையும் அனுமதியின்றி நடை பாதைக்களில் வைக்க கூடாது என்றும் தெரிவித்திருந்தது. அதனை மீறி நடைபாதையில் பதாகைகள் வைக்கப்பட்டது குறித்து நீதிபதிகள் கேள்வியை எழுப்பினர். அதற்கு தமிழக அரசு சரியாக பதிலளிக்காததால் இன்று அனுமதியின்றி சட்ட விரோதமாக வைத்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க கோரி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பபட்டிருந்த பதாகை விழுந்து ஒரு பொறியாளர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
First published: September 30, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading