Home /News /tamil-nadu /

பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவராக முன்னாள் அமைச்சரை தேர்ந்தெடுத்த விவகாரம் - அரசு பதிலளிக்க உத்தரவு!

பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவராக முன்னாள் அமைச்சரை தேர்ந்தெடுத்த விவகாரம் - அரசு பதிலளிக்க உத்தரவு!

அக்ரி கிருஷ்ண மூர்த்தி

அக்ரி கிருஷ்ண மூர்த்தி

தேர்தல் நடத்தாமல் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு, மாவட்ட் பால உற்பத்தியாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுத்தது கூட்டுறவு சங்க விதிகளுக்கு எதிரானது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தேர்ந்தெடுத்த உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 522 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் தினமும் 3 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட சங்க துணைப் பதிவாளர் அவர்கள், அம்மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தேர்ந்தெடுத்திருப்பதாக கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அறிவித்தார்.

    அதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இலத்தூர் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை அக்ரி கிருஷ்ணமூர்த்தி நடத்தி வருவதாகவும், அதன் காரணமாக அவருக்கு இந்த பதவி வழங்கி இருப்பதாகவும் கூறிப்பிடப்பட்டிருந்தது.

    தேர்தல் நடத்தாமல் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு, மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுத்தது கூட்டுறவு சங்க விதிகளுக்கு எதிரானது.

    அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைவராக தேர்ந்தெடுக்க தகுதியாக கூறுப்படும் இலத்தூர் பால் உற்பத்தியாளர் சங்கம் தற்போது வரை ஒரு லிட்டர் பாலை கூட ஆவின் நிறுவனத்திற்கு வழங்கவில்லை.

    விதிகளின் படி 90 நாட்களில் 120 லிட்டர் பாலை கூட்டுறவுக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை அக்ரி கிருஷ்ணமூர்த்தி வைத்திருக்கும் சங்கம் நிறைவேற்றி இருப்பதற்கான ஆவணங்களும் இல்லை.

    எனவே அக்ரி கிருஷ்ணமூர்த்தியை திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுத்ததை ரத்து செய்ய கோரி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வனபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் பச்சமுத்து என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கு தொடர்பாக ஆவின் இயக்குனர், திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 27-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Agri krishnamoorthi, Madras High court

    அடுத்த செய்தி