மனநல காப்பக நோயாளிகளுக்கு ஒரு வாரத்தில் கொரோனா பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு மனநல காப்பகத்தில் ஆண்கள் இருக்கும் இரு வார்டுகளில் உள்ள 26 பேருக்கு தோற்று உறுதியானதை அடுத்து அந்த வார்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே பரிசோதனை எடுக்கப்பட்டது.

மனநல காப்பக நோயாளிகளுக்கு ஒரு வாரத்தில் கொரோனா பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
கோப்புப்படம்
  • Share this:
அரசு கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள 800க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனைவரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் இதுவரை 26 நோயாளிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு நோயாளிகள் மட்டும் வயது முதிர்வு காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தனர். மற்ற நோயாளிகள் காப்பக வளாகத்திலேயே வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இந்த நோயாளிகளை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அல்லது கொரோனா சிகிச்சை வழங்கக்கூடிய வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் உரிமை பாதுகாப்போர் சங்கத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.


அதில் மனநல காப்பக கொரோனா நோயாளி ஒருவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு இடம் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவருக்கு மறுநாள் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தங்கள் உடல்நிலை குறித்து மற்றவர்களிடம் தெளிவாக எடுத்துக் கூற முடியாத நிலையில் இருக்கும் இந்த நோயாளிகளை மருத்துவமனையில் வைத்து சிகிச்சை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.

மேலும் ஒரே வளாகத்தில் உள்ள மற்ற நோயாளிகளுக்கும் பரிசோதனை எடுக்க வேண்டுமென்று கோரியிருந்தனர். அரசு மனநல காப்பகத்தில் ஆண்கள் இருக்கும் இரு வார்டுகளில் உள்ள 26 பேருக்கு தோற்று உறுதியானதை அடுத்து அந்த வார்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே பரிசோதனை எடுக்கப்பட்டது.மற்ற நாடுகளில் உள்ள நோயாளிகளுக்கு அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை எடுக்கப்படும், இதுவே மத்திய அரசினுடைய வழிகாட்டுதலும் கூட என்று அரசு தெரிவித்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மனநல காப்பகத்தில் உள்ள 800 நோயாளிகளுக்கும் கொரோனா பரிசோதனை ஒரு வாரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Also read... கொரோனா சிகிச்சை முடிந்த முதல் நாளே பொதுநிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர்... அதிகாரிகள் கலக்கம்

பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து நோயாளிகளின் உடல்நிலை பொருத்தும் அவர்களை எந்த மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

ஏற்கனவே மனநல காப்பகத்தின் இயக்குனர் கொரோனா உறுதி செய்யப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading