TNEB கேங்மேன் நியமனத்தில் பல கோடி ரூபாய் மோசடி... லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

TNEB கேங்மேன் நியமனத்தில் பல கோடி ரூபாய் மோசடி... லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: February 3, 2020, 11:47 AM IST
  • Share this:
மின்சார துறையில் கேங்மேன் நியமனத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பான புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 5,000 கேங்மேன் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு நேரடி நியமனம் செய்யப்பட்டது.

இதில் மின் கம்பங்களில் ஏறுதல், மின் பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்த பலரை, சில தொழிற்சங்கங்கள், கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு பணி நியமனம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.


மின்துறை அதிகாரிகள், தொழிற்சங்கங்கள் சம்பந்தப்பட்ட இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் புகார் மனுவை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, மனுதாரரின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.Also see...
First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading