Home /News /tamil-nadu /

பொன் மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பொன் மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பொன் மாணிக்கவேல் பொய் வழக்கு பதிந்ததாகக் கூறி உயர்நீதிமன்றத்தில் முன்னாள் டிஎஸ்பி காதர்பாஷா வழக்கு தொடர்ந்தார்.

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சிலைக்கடத்தல் வழக்கு குற்றவாளிகளை தப்பிக்க வைக்க போலீசார் மீதும், இந்து சமய அறநிலைய துறையினர் மீதும் பொன் மாணிக்கவேல் பொய் வழக்கு பதிந்ததாகக் கூறி உயர்நீதிமன்றத்தில் முன்னாள் டிஎஸ்பி காதர்பாஷா வழக்கு தொடர்ந்தார்.

    அந்த மனுவில் பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ததாகவும், ஜாமீனில் விடுதலையான தன்னை மற்றொரு பொய் வழக்கில் சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

    உயர் நீதிமன்றத்தையும், சிறப்பு நீதிமன்றத்தையும் தவறாக பயன்படுத்திய பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்துறை செயலாளருக்கு மனு அளித்ததாகவும், இதுவரை நடவடிக்கை எடுக்காததால் பொன் மாணிக்கவேல் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஓய்வுபெற்ற ஜ.ஜி பொன் மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai High court, IG Pon Manickavel

    அடுத்த செய்தி