Home /News /tamil-nadu /

கனிம வளக் கொள்ளையை தடுக்கக்கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

கனிம வளக் கொள்ளையை தடுக்கக்கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

மாதிரி படம்

மாதிரி படம்

சேலத்தை சேர்ந்த ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், சேலம் மேற்கு தாலுகாவில் உள்ள கருங்கரடு, ரெட்டியூர் மற்றும் ஓமலூர் தாலுகாவில் உள்ள ஜெகதேவன்பட்டி ஆகிய கிராமங்களில் கிரானைட் கொள்ளை நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
சேலம் மேற்கு, ஓமலூர் தாலுகாக்களில் நடைபெறும் கனிம வளக் கொள்ளையை தடுக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலத்தை சேர்ந்த ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், சேலம் மேற்கு தாலுகாவில் உள்ள கருங்கரடு, ரெட்டியூர் மற்றும் ஓமலூர் தாலுகாவில் உள்ள ஜெகதேவன்பட்டி ஆகிய கிராமங்களில் கிரானைட் கொள்ளை நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

உரிமம் பெற்ற குவாரி உரிமையாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக வெட்டி எடுத்து விதிமீறலில் ஈடுபடுவதையும், உரிமம் பெறாவர்களால் மேற்கொள்ளும் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் வருவாய் துறை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை என்றும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத கனிம வளக் கொள்ளையை தடுக்கும் வகையில் மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான அதிரடிப்படைகளை தமிழக அரசு 2009ஆம் ஆண்டே அமைத்தும், சட்டவிரோத செயல்பாடுகளை தடுக்க முடியவில்லை என மனுவில் குற்றம்சாட்டி உள்ளார்.

Also read... ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் இல்லத்தில் சோதனை நடத்தியதற்கு பார் கவுன்சில் கண்டனம்!

எனவே விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக அரசு துறைகளில் ஊழல் கண்காணிப்பு ஆணையர் அடங்கிய குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

Also read... 8 மாவட்டங்களில் மட்டுமே பார்களுக்கான டெண்டர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது - நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து 3 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி மூன்றாவது வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court

அடுத்த செய்தி