ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு - தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராக விலக்கு!

தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு - தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராக விலக்கு!

தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகளில், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கை, பரப்பு உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகளில், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கை, பரப்பு உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகளில், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கை, பரப்பு உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

மேலும் படிக்கவும் ...
 • 2 minute read
 • Last Updated :

  நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான் வழக்கில் நேரில் ஆஜராக தலைமை செயலாளருக்கு விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

  தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகளில், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கை, பரப்பு உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

  அதன்படி தலைமைச் செயலாளர் இறையன்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீர்நிலை புள்ளி விவரங்களை சேகரித்துவருவதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறி, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

  கடந்த முறை இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தலைமைச் செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில் நீதிமன்றம் கோரிய எந்த விபரமும் இல்லை என நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

  நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அனுமதித்த ஒரு அதிகாரி கூட தண்டனையில் இருந்து தப்ப முடியாது என எச்சரித்த நீதிபதிகள், எங்கு நீர் நிலை உள்ளது என தெரிந்தால் தான் ஆக்கிரமிப்புகள் இருக்கிறதா இல்லையா என கண்டறிய இயலும் என்றனர்.

  ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை நீர் நிலைகள் உள்ளன, அதன் சர்வே எண், அதன் பரப்பளவு உள்ளிட்ட விபரங்களை தான் அரசிடம் கேட்டோம்... ஆனால் இந்த அறிக்கை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தோல்வியை காட்டுகிறது என அதிருப்தி தெரிவித்தனர்.

  57,688 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக கூறப்படும் நிலையில்

  8,797 ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகக் கூறி, சம்பிரதயாத்துக்காக மட்டுமே இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்

  எவரையும் மன்னிக்க முடியாதெனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

  முதலில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை ஆஜராக உத்தரவிட வேண்டி வரும், இரண்டாவது முறையும் இது தொடருமானால் ஊதியத்தை நிறுத்த உத்தரவிட நேரிடும் என தெரிவித்த நீதிபதிகள்,

  அதிகாரிகள் செய்யும் தவறுக்காக அரசை குறை கூற முடியாதென தெரிவித்தனர்

  தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

  இந்நிலையில், இந்த வழக்கில் நேரில் ஆஜராக விலக்களிக்கக்கோரி தலைமை செயலாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீண்டும் நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி வருவாய் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

  Also read... தேசிய, மாநில அரசின் சின்னங்கள் தவறாக பயப்படுத்துவதை தடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு

  அதில் தமிழகத்தில் நீர்நிலைகள் குறித்த விவரங்களை முழுமையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே இந்த அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்பதற்காக தலைமை செயலாளர் வெ.இறையன்பு நாளை ஆஜராக வேண்டுமென்ற உத்தரவிற்கு விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

  அதனை ஏற்ற நீதிபதிகள், தலைமை செயலாளர் ஆஜராக வேண்டுமென்ற உத்தரவிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டனர். மேலும் பதிவேற்றம் செய்யப்பட்ட இணையதள முகவரியையும் நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

  First published: