ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உணவு கலப்படக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீதிமன்றம்

உணவு கலப்பட புகாருக்கு வெறும் அபராதம் மட்டும் விதிக்காமல், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடவடிக்கை எடுக்கத் தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
 • 1 minute read
 • Last Updated :

  உணவு கலப்படம் தொடர்பாக மாதிரிகள் சேகரித்து, ஆய்வு நடத்தினால் மட்டும் போதாது என்றும், கலப்படத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  தங்கள் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிய தனியா பாதுகாப்பற்றது என உணவு பாதுகாப்புத் துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மனோகர் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரம்ணியம் பிறப்பித்த உத்தரவில், உணவு கலப்படத்தை தடுக்க தனி துறை அமைக்கப்பட்டுள்ள போதும், கலப்படம் என்பது அதிகளவில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

  மாதிரிகள் சேகரித்து, ஆய்வு செய்வது மட்டும் போதாது எனத் தெரிவித்த நீதிபதி, உணவு கலப்படத்தை தடுக்க, பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் உணவு கலப்படம் தொடர்பாக மக்கள் உடனடி புகார் தெரிவிக்க கடைகளில் உணவு பாதுகாப்பு துறை வாட்ஸ் ஆப் எண்களை வைக்க அறிவுறுத்த வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

  Also read... முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி

  உணவு கலப்பட புகாருக்கு வெறும் அபராதம் மட்டும் விதிக்காமல், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடவடிக்கை எடுக்கத் தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

  First published: