மாணவி மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்டாரா? இல்லையா? - வழக்கில் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

கோப்புப் படம்

சந்திரலேகா மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டதாகவும், அரசு மருத்துவக் கல்லூரியில் 3 இடங்கள் இருந்த போதிலும் அந்த இடங்களை தேர்வு செய்ய விருப்பமின்றி விலகி இருக்கிறீகள் எனவும் அவரது முகவரிக்கு மாணவர் தேர்வு குழு மூலமாக கடிதம் வந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மருத்துவ படிப்பில் மகளுக்கு இடம் ஒதுக்கக்கோரி தாய் தொடர்ந்த வழக்கில், சம்பந்தப்பட்ட மாணவி கலந்தாய்வில் கலந்து கொண்டாரா? இல்லையா? என்பது குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்க மருத்துவ கல்வி தேர்வுக்குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ரோசனை பகுதியை சேர்ந்த சந்திரலேகா. நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் நேர்காணலுக்கான அழைப்போ அல்லது 7.5% ஒதுக்கீட்டிலான கலந்தாய்விற்கான அழைப்போ வராததால், அண்ணா பல்கலைக் கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. சிவில் என்ஜினியரிங் படிப்பில் தமிழ் வழியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், சந்திரலேகா மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டதாகவும், அரசு மருத்துவக் கல்லூரியில் 3 இடங்கள் இருந்த போதிலும் அந்த இடங்களை தேர்வு செய்ய விருப்பமின்றி விலகி இருக்கிறீகள் எனவும் அவரது முகவரிக்கு மாணவர் தேர்வு குழு மூலமாக கடிதம் வந்துள்ளது.

இந்த கடிதத்தை எதிர்த்து, அவரது தாயார் மகேஷ்வரி, தன் மகளை மருத்துவ படிப்பில் சேர்க்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி பி. புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோகரன், மருத்துவ கலந்தாய்வில் மாணவி கலந்து கொண்டதால்தான், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், கலந்துகொள்ளவில்லை என்பது தவறான தகவல் என தெரிவித்தார்.

Also read... தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்கக்கோரி வழக்கு - தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜேந்திரன், கல்ந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பே வழங்காத நிலையில், இடத்தை தேர்வு செய்யவில்லை என எப்படி கூறமுடியும் என்றும், மாணவியின் தகுதியை ஆராய்ந்து இடம் வழங்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து வழக்கு குறித்து தமிழக அரசும், தேர்வுக்குழுவும் பதிலளிக்க உத்தரவிட்டும், மாணவியை கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டாரா என்பது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை மார்ச் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: