Home /News /tamil-nadu /

வாரம் ஒருமுறை பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளை அனுமதிக்க வேண்டும்- சிறைத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

வாரம் ஒருமுறை பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளை அனுமதிக்க வேண்டும்- சிறைத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

அற்புதம் அம்மாள் மற்றும் பேரறிவாளன்

அற்புதம் அம்மாள் மற்றும் பேரறிவாளன்

வருகிற ஜனவரி 19-ந்தேதி வரை வாரம் ஒருமுறை பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளை அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
ஜனவரி 19-ந்தேதி வரை வாரம் ஒருமுறை பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளை அனுமதிக்க வேண்டும் என சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் பேரறிவாளன் அடைக்கப்பட்டுள்ளார்.அண்மையில் உடல் நலம் சரியில்லாமல் பரோலில் வெளியில் வந்த பேரறிவாளன், கடந்த 7-ந்தேதி மீண்டும் சிறைக்குள் சென்றார்.

இந்த நிலையில் பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளுக்கும், உறவினர்களுக்கும் அனுமதி வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா காலம் என்பதால் பேரறிவாளனின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரை காணொலி காட்சி வாயிலாக சந்திக்க அனுமதிக்க முடியும். ஆனால் பேரறிவாளனின் வழக்கறிஞர் எனக்கூறி பலர் கும்பலாக சந்திக்க வருவதாக சிறைத்துறை தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

Also read... போலீசை பழிவாங்க காவலர் குடியிருப்புகளில் மட்டுமே சைக்கிள்கள் திருடியவர்கள் கைது!

இதையடுத்து, உறவினர்கள், நண்பர்களை கணொலி காட்சி வாயிலாக சந்திக்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்களை பொருத்த வரை அவர்கள் பெயர் பட்டியலை சிறை நிர்வாகத்திடம் கொடுக்கும் பட்சத்தில் அதில் யாரை அனுமதிப்பது என்பதை சிறை சூப்பிரண்டு முடிவு செய்வார் என தெரிவித்தனர்.

மேலும், அற்புதம்மாளை பொருத்தவரை அவர் தனக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை பரிசோதித்து மருத்துவ சான்றிதழை சமர்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் வருகிற ஜனவரி 19-ந்தேதி வரை வாரம் ஒருமுறை பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளை அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Arputham Ammal, Jail, Madras High court, Perarivalan

அடுத்த செய்தி