கிருஷ்ணகிரியில் கனிம வளங்களை எடுப்பதற்கான புதிய டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடை...!

கிருஷ்ணகிரியில் கனிம வளங்களை எடுப்பதற்கான புதிய டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடை...!

கோப்புப் படம்

நூறு கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையிலும், ஆளுங்கட்சியினருக்கு ஒதுக்கிடும் வகையிலும் வெளியிடப்பட்ட இந்த புதிய டெண்டரை ரத்து செய்ய வேண்டுமென தாமரைச்செல்வன் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிம வளங்களை எடுப்பதற்கான புதிய டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் 18 இடங்களில் கருப்பு, சிவப்பு, சாம்பல் நிற கிரானைட்டுகளை எடுக்க கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட டெண்டர் அறிவிப்புகளை எதிர்த்து திமுக முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன் மற்றும் காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் ஆகியோர் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்படி, சுற்றுச்சூழல் சான்றிதழ் பெறப்பட வேண்டும் எனவும், வழிகாட்டுதல்களுக்கு முரணாக வெளியிடப்பட்டுள்ள இந்த டெண்டர் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் டெண்டர் நடவடிக்கை தொடரலாம் என்றும் ஆனால் அந்த இடங்களை ஒப்படைக்க கூடாது என்று இடைக்கால தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் 17 குவாரிகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 குவாரிகளும் அமைக்க பிப்ரவரி மாதம் புதிய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுரங்கங்களுக்கான விதிகளையும், சுற்றுச்சூழல் விதிகளையும் பின்பற்றாமல் மீண்டும் புதிய டெண்டரை வெளியிடப்பட்டுள்ளதாக திமுக தர்மபுரி முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

Also read... எம்.பி., கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு...!

நூறு கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையிலும், ஆளுங்கட்சியினருக்கு ஒதுக்கிடும் வகையிலும் வெளியிடப்பட்ட இந்த புதிய டெண்டரை ரத்து செய்ய வேண்டுமென தாமரைச்செல்வன் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்திகுமார் குரூப் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிம வளங்கள் எடுப்பதற்கான புதிய டெண்டருக்கு இடைக்கால தடை விதித்தும் இந்த வழக்கு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் மார்ச் 3 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: