முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆன்லைன் விளையாட்டுக்கு தடைகோரிய வழக்கு; தன்னிச்சையாக முடிவு எடுக்கமுடியாது... மத்திய அரசு

ஆன்லைன் விளையாட்டுக்கு தடைகோரிய வழக்கு; தன்னிச்சையாக முடிவு எடுக்கமுடியாது... மத்திய அரசு

ஆன்லைன் சூதாட்டம் - கோப்புப் படம்

ஆன்லைன் சூதாட்டம் - கோப்புப் படம்

ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமல்லாமல், குழந்தைகளையும் சீரழிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிக்கவும், அதன் விளம்பரத்தில் வரும் விராட் கோலி, தமன்னாவை கைது செய்யவும் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசமும், ஆன்லைன் ரம்மிக்கு எதிராக வழக்கறிஞர் வினோத்தும் வழக்கு தொடர்ந்தனர்.

இதுதொடர்பான விசாரணையில், நீதிமன்ற உத்தரவின்றி எந்த இணையதளத்தையும் தன்னிச்சையாக முடக்க முடியாது எனவும், இணையதள சேவை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் மட்டுமே வழங்க முடியும் என்றும் மத்திய தகவல் தொலைதொடர்பு துறை பதில் அளித்தது.

மேலும், கோலி, தமன்னா இருவரையும் வழக்கில் சேர்க்க கோரியதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களை மட்டும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க.. சூரரைப்போற்று பட பாடலில் சாதிக்கலவரத்தை தூண்டும் வரிகள் இருப்பதாக புகார்.. சட்டநடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகின்ற 29-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

First published:

Tags: Chennai High court, Online, Online Game PUBG