அஞ்சல்துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை! அவசர வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்திலிருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், திடீரென தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

news18
Updated: July 13, 2019, 9:54 PM IST
அஞ்சல்துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை! அவசர வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மாதிரிப் படம்
news18
Updated: July 13, 2019, 9:54 PM IST
மத்திய அரசு நடத்தும் தபால்துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. 

தபால்துறையில் அஞ்சலர் உட்பட 4 வகையான பணியிடங்களுக்கான தேர்வுகள் நாடு முழுவதும் நாளை நடைபெறுகின்றன. கடந்த ஆண்டு இத்தேர்வு தமிழ் உட்பட 15 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட்டன.

இந்நிலையில் தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு கடந்த 11-ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தபால் தேர்வுகள் இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், திடீரென தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அஞ்சல் துறை தேர்வில் திடீரென தமிழ் நீக்கம்; தேர்வர்கள் அதிர்ச்சி - தலைவர்கள் கண்டனம்

இந்தநிலையில், தபால்துறைத் தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்படுவதற்கு எதிராக சமூக ஆர்வலர் ஹென்றி டிபேன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்குத் தொடர்ந்துள்ளார். மனு மீதான விசாரணையை நீதிபதிகள் ரவிச்சந்திர பாபு, மகாதேவன் அமர்வு விசாரிக்கிறது. நாளை தேர்வு நடைபெறவுள்ள நிலையில், அவசரவழக்காக அதனை விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘நாளை தேர்வை நடத்தத் தடையில்லை. அதேநேரத்தில், தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது. தேர்வு இரு மொழிகளில் மட்டும் நடத்தப்படுவது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை அளிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டது.

Also see:
Loading...
First published: July 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...