Home /News /tamil-nadu /

ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி விதிகளை மீறி கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கியது யார்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி…

ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி விதிகளை மீறி கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கியது யார்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி…

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம்

தமிழகத்தில் பழமையான கோவில்கள், கோபுரங்கள் உள்ள பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டங்களை கட்ட கூடாது, என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி விதிகளை மீறி கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கியது யார் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

    கரூர், குளித்தலையை சேர்ந்த மகுடேஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,  தமிழகத்தில் பழமையான கோவில்கள், கோபுரங்கள் உள்ள பகுதிகளில்  ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டங்களை கட்ட கூடாது,  என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

    திருச்சி, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் அரசாணையை மதிக்காமல் சட்ட விரோதமாக கட்டிடங்கள் கட்டி உள்ளனர். 30.01.1997 ஆம் ஆண்டு அரசாணை படி கோயிலை சுற்றி 1 கிலோமீட்டர் தூரம் வரை கட்டிடங்கள் கட்ட கூடாது என்றும் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டிடங்கள் கட்ட கூடாது என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    தென்காசியில் தீண்டாமையால் மாணவர்களுக்கு தின்பண்டங்கள் மறுப்பு... மதுரையில் இருந்து 5 கிலோ தின்பண்டங்களை அனுப்பிய சமூக ஆர்வலர்கள்

    அரசாணையை மீறி அப்பகுதியில் 73 கட்டிடங்கள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கோயிலில் இருந்து 100 மீட்டர்க்குள் கட்டப்பட்டுள்ளது. கோயில்  அருகே அமைந்துள்ள உத்தர வீதி ,சித்திர வீதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. விதிகளை மீறி பல கட்டிடங்கள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ளது. இதில் 7 கட்டிடங்கள் தற்போது கட்டிட பணியில் உள்ளது. 5 வணிக கட்டிடங்களும், 63 கட்டிடங்களும் அரசாணை பிறப்பித்தற்கு பிறகு கட்டப்பட்டுள்ளன.

    விதிமீறி கட்டபட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து அகற்ற கோரி வழக்கறிஞர் ஆணையாளயை நியமனம் செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    ஜெயலலிதாவின் உயிலை வெளியிட வேண்டும்.. மெரினா நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி ஓய்வுபெற்ற அரசு ஊழியர் மனு

    இந்த மனு நீதிபதிகள் R.மகாதேவன்,  J.சத்யநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதிகள் , திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலை  சுற்றி உள்ள பகுதிகளில் விதிகளை மீறி  கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது யார்? கேள்வி எழுப்பினர்.

    மத்திய தொல்லியல் துறையின்  இயக்குநர்,  திருச்சி மாவட்ட ஆட்சியர்,  இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோர் இது குறித்து தற்போதைய நிலை குறித்து  விரிவான நிலைஅறிக்கை  தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Madurai High Court, Srirangam

    அடுத்த செய்தி