ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குலசை தசரா நடன குழுவில் சினிமா, டிவி நடிகர்கள் பங்கேற்கலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி

குலசை தசரா நடன குழுவில் சினிமா, டிவி நடிகர்கள் பங்கேற்கலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி

கோப்பு படம்

கோப்பு படம்

முத்தாரம்மன் கோவில் திருவிழாக்களில் கலந்து கொள்வதற்காக கிராமங்களுக்கு வரும் சினிமா மற்றும் தொலைக்காட்சி கலைஞர்களை ஒட்டு மொத்தமாக தடை செய்வதை தடுக்க வேண்டும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

குலசேகரன்பட்டினம்  தசரா திருவிழா, நடன குழுவில் சினிமா, TV நடிகர்கள் பங்கேற்கலாம் ஆனால் ஆபாச நடனம் கண்டிப்பாக இருக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்களுக்கு வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறும் என்பது ஐதீகம். இந்த திருவிழாவில் அநாகரீமான அல்லது ஆபாச நடனம் இடம்பெறக்கூடாது என கடந்த 14ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை காவல்துறையினர் தவறாக புரிந்துக்கொண்டு, திரைத்துறை மற்றும் டிவி நடிகர்கள் பங்கேற்க கூடாது என அறிவித்துள்ளதாகவும் அதனை நீதிமன்றம் தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் திருச்செந்தூர் அம்பிகை தசரா குழுவின் செயலாளர் வி.கண்ணன் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையும் வாசிக்க: நெருங்கும் தீபாவளி பண்டிகை - என்னென்ன பட்டாசு வெடிக்கலாம்? 28-ம் தேதி ஆலோசனை..!

அதில், முத்தாரம்மன் கோவில் திருவிழாக்களில் கலந்து கொள்வதற்காக கிராமங்களுக்கு வரும் சினிமா மற்றும் தொலைக்காட்சி கலைஞர்களை ஒட்டு மொத்தமாக தடை செய்வதை தடுக்க வேண்டும் எனவும் அதே நேரத்தில் ஆபசா நடனங்கள் இருக்காது என்பதை உறுதி செய்கிறோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பொது நல மனு, நீதிபதிகள் R.மகாதேவன்,  J.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Dussehra, Dussehra celebration, Madurai High Court