Home /News /tamil-nadu /

ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளில் பழைய வாகனங்களை மாற்ற வேண்டுமென்ற சுற்றறிக்கைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளில் பழைய வாகனங்களை மாற்ற வேண்டுமென்ற சுற்றறிக்கைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சிக்கு பயன்படுத்தும் இலகு ரக வாகனங்களை எட்டு ஆண்டுகளுக்கு பிறகும், கனரக வாகனங்களை 10 ஆண்டுகளுக்குப் பிறகும் மாற்றி விட்டு புதிய வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என, 2011ம் ஆண்டு தமிழக போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை பிறப்பித்தது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளில் எட்டு ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை மாற்றி விட்டு புதிய வாகனங்களை பயிற்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சிக்கு பயன்படுத்தும் இலகு ரக வாகனங்களை எட்டு ஆண்டுகளுக்கு பிறகும், கனரக வாகனங்களை 10 ஆண்டுகளுக்குப் பிறகும் மாற்றி விட்டு புதிய வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என 2011ம் ஆண்டு தமிழக போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை பிறப்பித்தது.

இந்த சுற்றறிக்கை கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் முதல் அமலுக்கு வந்த நிலையில், 2020ம் ஆண்டு முதல் புதிய வாகனங்களை பயிற்சிக்கு பயன்படுத்த வேண்டும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதை எதிர்த்து தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கொரோனா பேரிடர் காரணமாக ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டதாகவும், இந்த காலகட்டத்தில் வாகனங்கள் பயிற்சிக்கு பயன்படுத்தப்படாததால், புதிய வாகனங்களை பயன்படுத்தும்படி வற்புறுத்தக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Also read... உருமாறிய கொரோனா தொற்றினை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், மோட்டார் வாகன சட்டப்படி, வாகனங்களுக்கு வழங்கப்படும் பதிவுச் சான்றிதழ்கள் 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும், கொரோனா காரணமாக வாகனங்கள் பயிற்சிக்கு பயன்படுத்தவில்லை என்றும் கூறி, பயிற்சிக்கு புதிய வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு நான்கு வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 7 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court

அடுத்த செய்தி