பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை திருத்த வேண்டும் என்ற கருத்தை திரும்பப் பெற்றார் நீதிபதி வைத்தியநாதன்!

news18
Updated: August 22, 2019, 11:26 AM IST
பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை திருத்த வேண்டும் என்ற கருத்தை திரும்பப் பெற்றார் நீதிபதி வைத்தியநாதன்!
சென்னை உயர்நீதிமன்றம்
news18
Updated: August 22, 2019, 11:26 AM IST
பெண்கள் பாதுகாப்பு சட்டங்களை திருத்த வேண்டும் என்ற கருத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் திரும்பப் பெற்றுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் அப்பாவி ஆண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று நீதிபதி வைத்யநாதன் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தினை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் வைகை தலைமையிலான வழக்கறிஞர்கள் நீதிபதி வைத்தியநாதனை முறையிட்டு இந்த கருத்தினை திரும்ப பெறவேண்டும் என்று கோரினர்.


அதனை ஏற்று நீதிபதி வைத்தியநாதன் தனது கருத்தை திரும்ப பெற்றார். மேலும், கிறிஸ்தவ மிஷனரிகள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என பெற்றோர் கருதுவதாகவும் கூறிய கருத்தை ஏற்கனவே நீதிபதி வைத்தியநாதன் திரும்ப பெற்றிருந்து குறிப்பிடத்தக்கது.

Also see...

First published: August 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...