• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு விதித்த 4 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு விதித்த 4 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு!

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

கடந்த 1991-96ம் ஆண்டுகளில் சின்னசேலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த பரமசிவம், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்திற்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1991-96ம் ஆண்டுகளில் சின்னசேலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த பரமசிவம், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு துறை தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம், எம்.பி. எம்.எல்.ஏ..க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்துக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 33,04,168 ரூபாய் அபராதமும் விதித்து கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவில், கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வரும் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

Also read... QR Code ஸ்கேனில் பணம் திருடும் ஆன்லைன் மோசடி கும்பல் - SBI எச்சரிக்கை!

கடந்த முறை இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், 22,58,746 ரூபாய் சொத்து குவித்துள்ளதாக கூறிய நிலையில், 33,04,000 ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்ததாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி முடிவுக்கு வந்தது குற்றப்பத்திரிகைக்கு முரணானது எனவும், இந்த தொகை எப்படி கண்டறியப்பட்டது எனவும் விசாரணை நீதிமன்றம் தெரிவிக்கவில்லை எனவும், சொத்துக்கள் மதிப்பீடு செய்ததில் தவறுகள் உள்ளதாகவும் முன்னாள் எம்.எல்.ஏ. தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, இன்று இந்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதி, பரமசிவத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும், அபராத தொகையான 33 லட்சத்து 4 ஆயிரத்தில், 7.5 லட்சத்தை ஜூலை மாதம் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நிபந்தனையும் விதித்துள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: