Home /News /tamil-nadu /

டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுபவர்கள் அந்த கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது -  நீதிமன்றம் கருத்து!

டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுபவர்கள் அந்த கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது -  நீதிமன்றம் கருத்து!

கோப்புப் படம்

கோப்புப் படம்

சேலம் மாவட்டம், கருமலைக்கூடல் பகுதியில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் கூடிய பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டதை எதிர்த்து, அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட பலர் போராட்டம் நடத்தினர்.

  • News18
  • Last Updated :
டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுபவர்கள், அந்த கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டம், கருமலைக்கூடல் பகுதியில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் கூடிய பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டதை எதிர்த்து, அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட பலர் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தின் போது கடையின் மீது கல்வீசி தாக்கியதாக கடையின் விற்பனையாளர் அளித்த புகாரின் பேரில் 10 பெண்கள் உள்ளிட்டோர் மீது, கருமலைக்கூடல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

Also read... பைன் பியூச்சர் நிதி நிறுவன வழக்கு... 47 பேருக்கு தலா 5 லட்சம் பக்கங்களுடன் குற்றபத்திரிகை...!

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வருமானத்தைப் பெருக்க டாஸ்மாக் கடைகளை அமைப்பது அரசின் கொள்கை முடிவு என்றாலும், டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு, அந்த கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமையுண்டு எனக் கூறி, மனுதாரர் உட்பட 10 பெண்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court

அடுத்த செய்தி