புனித பூமியான இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை - உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

மாதிரிப் படம்

ஆன்மீக பூமியாக கருதப்படும் இந்திய நாட்டில், 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை என நடப்பது துரதிருஷ்டவசமானது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா ஊரடங்கின்போது, மஹாராஷ்டிராவில் சிக்கித்தவித்த தமிழர்களை மீட்க கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் தொடர்பான விவகாரங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என மத்திய மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து வழக்கை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அப்போது, மனுதாரர் சூரியபிரகாசம் ஆஜராகி, திருப்பூர் மாவட்டத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டினார்.

Also read... பெற்றோர்கள் குழந்தைகளோடு நேரத்தை செலவிடாததாலேயே இளம்பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர் - உயர்நீதிமன்றம் வேதனைஅதற்கு நீதிபதிகள், தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய நேரக்கட்டுப்பாடும் இல்லை என்றும், உரிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

மேலும், ஆன்மீக பூமியாக கருதப்படும் இந்திய நாட்டில், 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை என நடப்பதால், பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

இது துரதிஷ்டவசமானது என்றும், குறிப்பாக இந்தியாவில் புலம்பெயர்ந்த பெண் தொழிலார்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

பின்னர் திருப்பூர் சம்பவம் குறித்து மேற்கு மண்டல ஐஜி விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published: